2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரார் ஸ்ரீ சபாரத்தினத்தின் 25ஆவது சிரார்த்த தினம்

Super User   / 2011 மே 07 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரார் ஸ்ரீ சபாரத்தினத்தின் 25ஆவது சிரார்த்த தினம் நேற்று வெள்ளிக்கிழமை அவர் கொல்லப்பட்ட கோண்டாவில் கிழக்கு கோகுல வீதியில் அமைந்துள்ள அன்னுங்கை தோட்ட வெளியில் ஸ்ரீ ரெலோ இயக்கத்தின் உறுப்பினர் சோ.செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஸ்ரீ ரெலோ அமைப்பின் தலைவர் ப.உதயராசா உட்பட பலர் நினைவு சுடரை ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து அஞ்சலி உரையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நிகழ்த்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X