2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சைக்கிள்களில் சமாந்தரமாக பயணித்த 26 பேருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 22 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நகரப்  பகுதிகளில் சைக்கிள்களில் சமாந்தரமாகப் பயணித்த 26 பேருக்கு  தலா 500 ரூபாய் வீதம் அபராதத் தொகை  விதித்து யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராசா இன்று தீர்ப்பளித்துள்ளார்;.

யாழ். நகரப்  பகுதிகளில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள்களில் சமாந்தரமாகப் பயணித்ததாகக் கூறி  26 பேர்  இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்.; பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு; யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, இவர்களுக்கான அபராதத் தொகை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.  

இதேவேளை, கடந்த 15ஆம் திகதி யாழ். நகரப்பகுதியின் பிரதான ஏ - 9  வீதியில்  சைக்கிள்களில் சமாந்தரமாகப் பயணித்த 80 பேர் யாழ். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 30 பேர்; யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தலா 500 ரூபாய் அபராதத் தொகை விதித்து நீதவான் தீர்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X