2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சங்கானையில் 28பேருக்கு காணி உறுதிகள்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 20 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


சங்கானை மேற்கு பிரதேச சபையால் சங்கானை தெற்கு ஜே - 180 கிராமஅலுவலர் பிரிவிலுள்ள 28 பேருக்கு, 50 பரப்பு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் திருமதி ராகரஞ்சனி ஐங்கரன் புதன்கிழமை (19) தெரிவித்தார்.

அம்மக்களுக்கான காணி உறுதிகள் புதன்கிழமை (19), பிரதேச சபையில் வைத்து வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

28 குடும்பங்களும் மேற்படி காணியில் கடந்த 50 வருடங்களாக தற்காலிக குடிசைகளில் வசித்து வருகின்றனர். மிகவும் வறுமைப்பட்ட குடும்பங்களான மேற்படி குடும்பங்களுக்கு நிரந்தர காணிகள் இல்லாமையால் வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கவில்லை.

இது தொடர்பில் அக்குடும்பங்கள் எங்களிடம் கோரிக்கைகள் முன்வைத்தனர். இந்த கோரிக்கைகளுக்கு அமைய, நடவடிக்கைகள் மேற்கொண்டு அவர்கள் குடியிருந்த காணிகளை அவர்களின் சொந்த காணிகளாக்கி காணி உறுதிகள் மற்றும் காணி வரைபடங்கள் என்பன புதன்கிழமை (19) வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .