2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்தில் 300 சிறார்கள் தங்கள் பெற்றோர்களை இழந்துள்னர்- அரச அதிபர்

Kanagaraj   / 2013 ஜனவரி 20 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்
 
யுத்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 300 சிறார்கள் தங்கள் பெற்றோர்களை இழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற செஞ்சோலை சிறுவர் இல்ல திறப்பு விழாவில் பிரதம அதீதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் நாட்டில் சிறுவர் இல்லங்கைகளை குறைக்கவேண்டும் என்ற சிந்தனையுடன் செயற்பட்டு வருகின்றது. இருந்தபோதும் யுத்தப்பிரதேசங்களில் இதனை தேவை தற்போதும் இருக்கின்றது. இதனால் கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர் இல்லங்கள் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கவிடயமாகும். என்றார்.

கடந்த யுத்த காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 300  சிறார்கள் தங்கள் பெற்றோர்களை இழந்தவர்களாக இருக்கின்றனர். 1000 மேற்பட்ட சிறார்கள் தங்கள் தாய் அல்லது தந்தையை இழந்தவர்களாக இருக்கின்றனர்.

இவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களின் எதிர்கால வாழ்வை மேம்படுத்த அனைவரும் ஒத்துழைப்பது அவசியம் என்றும்  அவர் சொன்னார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X