2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மின்கட்டணம் செலுத்தாத 33,084 பேருக்கு சிவப்பு நோட்டிஸ்

Suganthini Ratnam   / 2013 மே 20 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாவட்டத்தில் மின் பாவனைக்குரிய நிலுவைக் கட்டணம் செலுத்தத் தவறியுள்ள 33 ஆயிரத்து 84 மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு நோட்டிஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கரப்பிள்ளை ஞானகணேசன் இன்று தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 500 ரூபாவுக்கு  மேற்பட்ட நிலுவைக் கட்டணம்  செலுத்தத் தவறிய 33,084 மின் பாவனையாளர்களுக்கே சிவப்பு நோட்டிஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

இந்த நிலுவைக் கட்டணம் தொடர்பில் 2 மாதங்களுக்கு ஒரு முறை பரிசீலிக்கப்பட்டு அதனடிப்படையில் மின் பாவனைக்குரிய நிலுவைக் கட்டணம் செலுத்தத் தவறியுள்ளவர்களுக்கே  சிவப்பு நோட்டிஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X