Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Super User / 2011 மே 09 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ் தெல்லிப்பழை மாவிட்டபுரத்தில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான ஆரம்ப வைபவம் மாவிட்ட புரம் கந்தசுவாமி கோவிலில் இன்று நடைபெற்றது.
மாவிட்டபுரத்தில் 9 கிராம சேவையாளர் பிரிவுகளில் 3511 குடும்பங்களளைச் சேர்ந்த 12274 பேர்; மீள்குடியேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் அமைச்சர்கள் பஷில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி, யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், யாழ் மேயர் யோகேஸ்வரி பற்குணராசா , தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அப்பாதுத்துரை விநாயகமூர்த்தி, சிவஞானம் சிறிதரன், ஈ.சரவணபவன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்டர் அலன்ரின், ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 May 2025