2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்கள் 36 பேரும் புறப்பட்டனர்

Kanagaraj   / 2014 ஜூன் 11 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன் 

யாழ்.நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்யப்பட்ட மீனவர்கள் 36 பேரும் இன்று புதன்கிழமை (11) காலை 9 மணிக்கு காங்கேசன்துறை கடற்பரப்பிலிருந்து புறப்பட்டு சென்றதாக  யாழ்.இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் விசேட உத்தரவிற்கமைய சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ தகவலினையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை (10) மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் மேற்படி மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து அவர்களை பொறுப்பேற்ற யாழ்;.கடற்றொழில் நீரியல் வளத்துறையினர் துணைத்தூதரகத்தினர் இலங்கை கடற்படையினரிடம் நேற்று (10) கையளித்தனர்.

கடற்படையினர் இன்று (11) காலை 9 மணிக்கு குறித்த மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைக்கும் பொருட்டு அழைத்துச் சென்றதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், மீனவர்களின் 8 ரோலர் படகுகளும், வலைகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தூதரக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .