Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஆதரவுடன் வலிதெற்கு உடுவில் பிரதேச செயலர் பிரிவில் மகளிர் அபிவிருத்தி நிலையத்தால் நடத்தப்படும் அழகியல் பொருள் கண்காட்சி எதிர்வரும் 4ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கந்தரோடை வீதியில் ஜயன்னா சனசமூக நிலையத்திற்கு அருகாமையிலுள்ள சங்கக் கட்டிடத்தில் நடைபெறவுள்ளது.
உடுவில் பிரதேச செயலாளர் திருமதி. மஞ்சுளாதேவி சதீசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் பிரதம விருந்தினராக வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஜே.ஜே.பெலிசியன் சிறப்பு விருந்தினர்களாக உடுவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி யாசோதா உதயகுமார், கணக்காளர் ஞா.லோகநாதன் யாழ். மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலர் திருமதி நவமணி அலோசியஸ், கௌரவ விருந்தினராக கிராம அலுவலர் பா.பாலபத்மன், சுன்னாகம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் திருமதி சாந்தி திருநாவுக்கரசு கலந்துகொள்ளவுள்ளனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago