2025 ஜூலை 09, புதன்கிழமை

கிளிநொச்சியில் 40 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நா.நவரத்தினராசா

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (22) மாலை 2.20 மணி தொடக்கம் 6.30 மணிவரையிலான காலப்பகுதியில் 40.3 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த மழையானது, கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய வரட்சியான காலநிலைக்கு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (22) மாலை 4.35 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையில் 49.1 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்படி, யாழ்.மாவட்டத்தில் இதுவரையில் 317.9 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .