2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழ்.நூலகத்திற்கு 400 இறுவெட்டுக்கள் அன்பளிப்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 16 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

சிறுவர்களின் கல்வித் தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்வதற்கான 400 இறுவெட்டுக்களை யாழ்.நூலகத்திற்கு சிங்கப்பூர் இன்டநேசனல் பவுன்டேஷன் நிறுவனம் வழங்கியுள்ளதாக யாழ்.நூலக பிரதம நூலகர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ்.நூலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

யாழ். நூலகத்திற்கு வெளிநாட்டவர்கள் அதிகளவில் நூல்களை அன்பளிப்பு செய்து வருகின்றனர். தற்போது யாழ்.நூலகத்தில் 1 இலட்சம்; நூல்கள் பாவனையில் உள்ளன.

முன்னைய காலங்களை விட யாழ்.நூலகத்தை பயன்படுத்துவோரின் தொகை அதிகரித்துள்ளது. 

சிறுவர்களின் பொழுதுபோக்கிற்கான சிறந்த நூல்கள் யாழ்.நூலகத்தில் இருக்கின்றன. பெற்றோர்கள் சிறுவர்களை அழைத்து வந்து நூல்களை படிக்க வைப்பது குறைவாக இருக்கின்றது.
 
யாழ்.நூலகதின் நூல்களைப் பாதுகாப்பதற்கு 'மைக்கிரோ பிலிம்' தற்போதைய தேவையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X