2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வேலணையில் 4751 குடும்பங்களுக்கு உருளை கிழங்குகள்

Gavitha   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

வரட்சி நிவாரணமாக வேலணை பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் 4 ஆயிரத்து 751 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ உருளைக்கிழங்குகள் வழங்கப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் திருமதி சதீஸன் மஞ்சுளா ஞாயிற்றுக்கிழமை (21) தெரிவித்தார்.

யாழ்.மாவட்;டத்தில் நிலவிய கடும் வரட்சி காரணமாக தீவக பிரதேசங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மக்கள் குடிநீர் பிரச்சினையை மிக மோசமாக எதிர்கொண்டதுடன், விவசாய நடவடிக்கைகளும் பாதிப்படைந்தன.

சிறு கடற்றொழில் மீன்பிடியாளர்கள் கடலின் நீர் மட்டம் வற்றியமையால், தொழிலில் பின்னடைவு ஏற்;பட்டதனால்; வாழ்வாதார ரீதியில் நெருக்கடிக்குள்ளாகினார்கள்.

இந்நிலையில், அனர்த்த முகாமைத்து அமைச்சின் நிதியுதவியிலும், வடமாகாண விவசாய அமைச்சு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவியில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இம்மக்களுக்கான உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

வேலணை பிரதேச செயலக பிரிவில் வரட்சியால்  பாதிக்கப்பட்ட 4751 குடும்பங்களுக்கு தலா 5 கிலோகிராம் உருளைக்கிழங்குகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த உருளைக்கிழங்குகள் பலநோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையங்கள் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .