2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சுன்னாகத்தில் 5 வீடுகளில் கொள்ளை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 15 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ்ப்பாணம்,  சுன்னாகத்தில் 5 வீடுகளில் தங்கநகைகள்,  பணம் மற்றும் வீட்டு உபகரணங்கள்; இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிகள், பொல்லுகள் மற்றும் இரும்புக் கம்பிகள் சகிதம் வந்த கொள்ளையர்கள், இவற்றில் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியும் வீட்டு உரிமையாளர்களையும் தாக்கிவிட்டு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இக்கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பொலிஸார் இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .