2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நாவற்குழி 5 வீட்டுத்திட்டப்பகுதி மக்களை சிறிதரன் எம்.பி. சந்தித்தார்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன்


யாழ். நாவற்குழி 5 வீட்டுத்திட்டப் பகுதி மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்  சந்தித்துக் கலந்துரையாடினார்.

அற்புத அன்னை சனசமூக நிலையத்தின் தலைவர் ரெஜினோல்ட் தலைமையில் நேற்று திங்கட்கிழமை (14)  நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது,  நாவற்குழி 5 வீட்டுத்திட்டப் பகுதி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்துகொண்டார்.

மேலும், அற்புத அன்னை சனசமூக நிலையத்தின் மின்சாரக் குறைபாட்டை  நிவர்த்தி செய்வதற்காக சனசமூக நிலையத் தலைவரிடம்  15,000 ரூபாவை நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார்.

இந்தச் சந்திப்பில் நல்லூர் பிரதேச சபைத் தலைவர் ப.வசந்தகுமார், கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் ப.குமாரசிங்கம், சனசமூக நிலையச் செயலாளர், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .