2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் விபசார சந்தேக நபர்கள் ஆறுபேருக்கு டிசம்பர் 5 வரை விளக்கமறியல்

Kogilavani   / 2011 நவம்பர் 28 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களில் ஆறு பேரை எதிர்வரும்  5ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் ஆ.ஆனந்தராஜா இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 13 ஆம் திகதி யாழ். விடுதியொன்றில் பொலிஸார் மேற்கொண்ட   முற்றுகையொன்றின்போது விபசாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 13 பேர்கைது செய்யப்பட்டடு இருந்தனர்

இவர்களில் 5 பேர் எச்சரிக்கப்பட்டு அன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

ஏனைய 8 பேரில் இருவர் தாம் நீண்டகால  காதலர்கள் எனக் கூறியமையினால்    பதிவுத் திருமணம் செய்து திருமண அத்தாட்சி பத்திரத்தை நீதிமன்றத்திற்கு சமர்பிக்குமாறு உத்தரவிடப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்

இன்றைய தினம் ஆறு பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை மேலும் ஒருவாரம் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .