2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடமாகாணத்தில் 50 ஆயிரம் விதவைகள்: சர்வேஸ்வரன்

George   / 2014 நவம்பர் 23 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருப்பதுடன், அவர்களில் 50 சதவீதமானவர்கள் இளம் விதவைகள் என வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன், ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இவ்வாறான பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளனர். அவர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது முக்கியமாகும்.

பெண்கள் பொருளாதார தன்னிறைவு அடைவது என்பது, பால்நிலை சமத்துவத்தை கட்டியெழுப்புவதற்கான முக்கிய படியாகும்.
குறிப்பாக கிராமிய பெண்கள் விடயத்தில் இது மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

யுத்தத்தால் அங்கவீனமுற்ற கணவன்மாரை கொண்ட குடும்பங்களும் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர்.

இவர்களின் பொருளாதார பலவீனங்களால் அவர்கள் பல்வேறு சமூக அபாயங்களுக்குள் வாழ்வாதாரங்களை தேடவேண்டிய பாதகமான சூழ்நிலையில் உள்ளனர்.

சுயதொழில் உதவிகள் ஊடாக இப்படியானவர்களை பொருளாதாரத்தில் தன்னிறைவு காண வைப்பது ஒரு முக்கிய வழிமுறையாகும்.
இதன்மூலமே அவர்கள் சுய பலத்தில் செயற்படவும் தமது குழந்தைகளை நற்பிரஜைகளாக உருவாக்கவும் முடியும்.

இதற்காக வடமாகாண சபை உறுப்பினர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை ஒதுக்கீட்டின் எனது நிதியிலிருந்து பெண்கள் கிராமிய அபிவிருத்தி மன்றங்களுக்கு ஒரு தொகை நிதியை கடந்த வியாழக்கிழமை (20) வழங்கியுள்ளேன்.

அவர்கள் அந்த நிதியை மூலதன சுற்றுக்கு (கடனாக வழங்குதல்) கையாளும் போது பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமையளித்து கடன்களை வழங்குவார்கள் என அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .