2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வடமாகாணத்துக்கு 50 பஸ் தரிப்பிடங்கள்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 05 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

வடமாகாணத்திலுள்ள பின்தங்கிய கிராமங்களில் 50 பஸ் தரிப்பிடங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தார்.

வடமாகாணத்திலுள்ள பின்தங்கிய கிராமங்களில் பஸ் தரிப்பிடங்கள் இல்லாமையால், மாணவர்களும், முதியவர்கள் போக்குவரத்தை மேற்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இதனை நிவர்த்தி செய்யும் நோக்குடன் இந்த பஸ் தரிப்பிடங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த மாதம் 15ஆம் திகதிக்கு பின்னர் இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெறவுள்ளதுடன், ஒரு தரிப்பிடத்திற்கு 3 இலட்சம் ரூபாய் தொடக்கம் 5 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கிராமத்திலுள்ள பிரதான இடங்களில் இந்த பஸ் தரிப்பிடங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .