2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழில் ரூ.544 மில்லியன் செலவில் வேலைத்திட்டங்கள்

Thipaan   / 2014 டிசெம்பர் 02 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ். மாவட்டத்தில் இவ்வாண்டு 544.56 மில்லியன் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, யாழ். மாவட்ட செயலக புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

32.40 மில்லியன் ரூபாய் செலவில் வாழ்வின் எழுச்சி திட்டங்களும் 43.15 மில்லியன் ரூபாய் செலவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு- செலவுத்திட்டத்தின் மூலமான திட்டங்களும் 50 மில்லியன் ரூபாய் செலவில் மக்கள் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட விசேட முதலாம் கட்ட திட்டங்களும் 25 மில்லியன் ரூபாய் செலவில் மக்கள் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட விசேட இரண்டாம் கட்ட திட்டங்களும் 247 மில்லியன் ரூபாய் செலவில் வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டங்களும், 147.01 மில்லியன் ரூபாய் செலவில் வடக்கின் வசந்தம் விசேட திட்டங்களும் செயற்படுத்தப்படுகின்றன.

இவற்றில் பல திட்டங்கள் நிறைவுபெற்றுள்ள போதும் இன்னும் சில திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .