Suganthini Ratnam / 2011 மார்ச் 16 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடக்கு கடற்பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை தடுப்பதற்காக இந்திய அரசாங்கத்திடம் ஆறு அம்சக் கோரிக்கை அடங்கிய மகஜரொன்று இந்தியத் தூதுவரூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் எஸ்.தவரெட்ணம் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஆட்புல எல்லைக்குட்பட்ட வடபகுதிக் கடலில் இந்திய மீனவர்கள் உள்நுழைவது தடுக்கப்பட வேண்டும், எமது கடல் வளங்களை எக்காலத்திலும் அழிக்கவோ ஆக்கிரமிக்கவோ இந்திய அரசு முயற்சிக்கக்கூடாது, வடபகுதியிலுள்ள முப்பதாயிரம் மீனவக் குடும்பங்களின் எதிர்காலத்திற்கு இலங்கை - இந்திய அரசுகள் பதில் சொல்லியாகவேண்டும், 2003ஆம் காலப்பகுதியில் இந்திய - இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முக்கிய பங்காற்றிய தேசிய மீனவர் ஒத்துழைப்பு அமைப்பை இருநாட்டு பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் ஆகியவை உள்ளடங்களாக 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025