2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வடமாகாணத்துக்கு ரூ.6,000 மில்லியன் நிதி

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 11 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா, எம்.றொசாந்த்

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு 2015ஆம் ஆண்டு 6000 மில்லியன் ரூபாய் நிதி வழங்குவதாக நிதி அமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர உறுதியளித்ததாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, 'நிதி அமைச்சின் செயலாளர் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது, வடமாகாண அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடினார். இதன்போது, வடமாகாண அபிவிருத்திக்கு 6,977 மில்லியன் ரூபாய் வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

அதற்கு அவர், 6000 மில்லியன் ரூபாவை தருவதற்கு உறுதியளித்ததுடன், மிகுதி 977 மில்லியன் ரூபாவை ஜனாதிபதியுடன் கதைத்து தருவதற்கான ஏற்பாடுகள் செய்வதாக உறுதியளித்தார்.

அத்துடன், வடமாகாண சபை கட்டிட தொகுதியை விருத்தி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய் நிதி தருவதற்கு உறுதியளித்து, அந்த நிதியை தற்போது அனுப்பி வைத்துள்ளார்.

அத்துடன், வடமாகாண சபை கட்டிட தொகுதியை 3 மாடிகள் கொண்ட தளமாக அமைத்து அங்கு முதலமைச்சர் அலுவலகம், பிரதம செயலாளர் அலுவலகம் ஆகியவற்றை அமைப்பதற்கு மேலும் 270 மில்லியன் ரூபாவை தருவதாக நிதி அமைச்சின் செயலாளர் உறுதியளித்திருந்ததாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .