2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 69 இந்திய மீனவர்களது விளக்கமறியல் ஊர்காவற்றுறை மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களால் நீடிக்கப்பட்டுள்ளன.

ஜுலை மாதம் 29 ஆம் திகதி நெடுந்தீவிற்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து 7 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 51 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியல் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பொன்னம்பலம் குமாரசாமி செவ்வாய்க்கிழமை (12) உத்தரவிட்டார்.

அதேவேளை,  ஜுலை 22 ஆம் திகதி எழுவைதீவுக் கடற்பரப்பில் வைத்து 5 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்;காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் செவ்வாய்க்கிழமை (12) உத்தரவிட்டார்.

மேற்படி மீனவர்களை, யாழ்.கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையினர் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .