2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். பஸ் நிலையத்தில் இரு வாரகாலமாக தங்கியிருந்த 8 வயது சிறுவன் மீட்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 20 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மத்திய பஸ் நிலையத்தில் கடந்த இரு வாரகாலமாக இரவு, பகலாக தங்கியிருந்த 8 வயது சிறுவனொருவனை நேற்று சனிக்கிழமை யாழ். பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

கிளிநொச்சி, இரணைமடுவை சேர்ந்த நடராசா சந்திரன் (வயது 8) என்ற சிறுவனே பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளான்.

மேற்படி சிறுவன் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இரவு, பகலாக அலைந்து திரிவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த சிறுவன் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளான்.

மேற்படி சிறுவன் நேற்று யாழ். மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டபோது, சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறும் சான்று பெற்ற பாடசாலையொன்றில் கல்வி கற்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X