2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மாணவர்கள் 8 பேர் யாழில் கைது

Super User   / 2011 நவம்பர் 11 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் ஹெரோயின் பாவனையில் ஈடுபட்ட க.பொ.த (உ/த) வகுப்பு மாணவர்கள் எட்டு பேர் இன்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாக யாழ். தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.

இம்மாணவர்கள், போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த எட்டு மாணவர்களும் நாளை சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், இவர்களுக்கு போதைபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் தரகர் நாளை கைது செய்யப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • Nirmalalraj Saturday, 12 November 2011 01:59 AM

    பிஞ்சிலேயே பழுக்க ஆசைப்படுபவர்கள்

    Reply : 0       0

    Senthil Saturday, 12 November 2011 02:10 AM

    போதையிலிருந்து மாணவ சமூகத்தை காப்பற்றுங்கள் பிளிஸ்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .