Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 நவம்பர் 14 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பிரதேசத்தில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் எட்டு பேரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மாவட்ட நீதிபதி அ. பிரேமசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இவர்களை யாழ். பொலிஸார் இன்று திங்கட்கிழமை யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களில் 5 ஆண்களும் 3 பெண்களும் அடங்குகின்றனர்.
இவர்களை சட்ட வைத்திய பரிசோனைக்குட்படுத்தி பாலியல் தொடர்பான நோய்கள் ஏதாவது உள்ளதா என அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் ஏனைய ஐந்து பேரை நீதிபதி எச்சரித்து விடுதலை செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .