Suganthini Ratnam / 2011 மார்ச் 16 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நகரப்பகுதியின் பிரதான ஏ - 9 வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி சைக்கிள்களில் சென்ற பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களென 80 பேரை நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
யாழ். போக்குவரத்து பொலிஸார் நேற்றுக் காலை 6 மணி முதல் 9.30 மணி வரை யாழ். நகரின் முக்கிய வீதிகளில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோதே இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 30 பேர் நேற்றுக் காலை யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது, இவர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் செலுத்தும்படி நீதவான் தீர்ப்பளித்தார்.
பாடசாலை மாணவர்கள் அனைவரும் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025