A.P.Mathan / 2011 செப்டெம்பர் 22 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
தென்மராட்சி ஏ-9 வீதியில் லொறி ஒன்றுடன் உழவு இயந்திரம் விபத்திற்குள்ளானதில் உழவு இயந்திரத்தில் சென்றவர் பலியாகியுள்ளார்.
இச்சம்பவத்தில் சரவாலை வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த இராசையா உதயச்சந்திரன் (வயது 49) என்பவரே பலியாகியுள்ளார். நேற்று புதன்கிழமை பிற்பகல் 4 மணியளவில் தென்மராட்சி மட்டுவில் கமலாம்பிகை வித்தியாலயத்திற்கு அருகாமையில் யாழ்ப்பாணத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த லொறியும் வலிகாமத்திலிருந்து சென்றுகொண்டிருந்த உழவு இயநந்திரமும் மோதிக்கொண்டதில் இவ் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் உழவு இயந்திரச் சாரதி படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதன்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தென்மராட்சிப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருவதுடன் சடலம் வைத்தியப் பரிசோதனையின் பின்னர் பிற்பகல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago