2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். குடாநாட்டில் 9 குடும்பங்கள் மட்டுமே மீள்குடியேற்றப்படவுள்ளன:ஜகத் ஜயசூரிய

Menaka Mookandi   / 2011 மார்ச் 07 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். குடாநாட்டில் மீள்குடியேற்றத்துக்காக இன்னும் ஒன்பது குடும்பங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் சுமார் 33பேர் கொண்ட இந்த குடும்பத்தினர் இன்னும் ஓரிரு வாரங்களில் மீள்குடியேற்றப்படுவர் என்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தெரிவித்தார்.

இதேவேளை, குடாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி வெடிகள் யாவும் படையினரால் முற்றாக அகற்றப்பட்டுவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டை அடுத்து ஊடகவியலாளர்களுடன் சில கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட போதே இராணுவ தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  (M.M)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X