2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் விபத்துக் காரணமாக இவ்வருடம் 9 பேர் பலி; 673 பேர் காயம்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 10 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் விபத்துக்கள் காரணமாக இந்த வருடம்  ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிவரை  9 பேர் பலியானதுடன், 673 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து சிகிச்சைப்பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

பலியானவர்களில் இரு பெண்களும் ஒரு சிறுவரும் 6 ஆண்களும் அடங்குகின்றனர். 

மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் காரணமாகவே  அதிகமானோர்; காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் 36 பேர் ஒரு காலை இழந்துள்ளதாகவும் 5 பேர் கை விரல்களை இழந்துள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து சிகிச்சைப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில்  அதிகரிக்கும் விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட  வேண்டும் எனவும் மதுபோதையில் வாகனங்கள் செலுத்துவதை  தவிர்க்கும் பட்சத்தில் விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து சிகிச்சைப்பிரிவு தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .