2025 மே 17, சனிக்கிழமை

சட்டவிரோத கருக்கலைப்புக்கு உதவிய குற்றச்சாட்டில் இளைஞன் யாழில் கைது

Super User   / 2012 மார்ச் 30 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                             (கவிசுகி)

சட்டவிரேத கருக்கலைப்புக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை தொடர்ந்தும் ஏப்ரல் மாதம் 3 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேராசா உத்தரவிட்டுள்ளார்

பெண்களுக்கு சட்ட விரோதமான முறையில் கருக்கலைப்பு செய்வதற்கு உதவி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் ஒருவரை யாழ்.பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்து, யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தினர்

இவரைப் பிணையில் விடுதலை செய்யுமாறு சந்தேக நபர் தரப்பு வழக்குரைஞர் மு.றெமிடியஸ் வாதிட்டார.;

சந்தேக நபரைப் பிணையில் செல்ல கடும் ஆட்சேபனை தெரிவித்து இந்த சந்தேக நபரை வெளியில் விடுதலை செய்தால் பல பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வார் என யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா மன்றில் தெரிவித்தார்

இதனை அடுத்து சந்தேக நபரை ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .