2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

7 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன

Gavitha   / 2015 நவம்பர் 09 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நேசமணி

வலிகாமம் மேற்கு (சங்கானை) பிரதேச செயலர் பிரிவில் 50 ஆயிரம் பனை விதைகள் நடுகை செய்யும் திட்டத்தின் கீழ், இன்று திங்கட்கிழமை (09) 7 ஆயிரம் பனை விதைகள் நடுகை செய்யப்பட்டன.

பிரதேச செயலர் அ.சோதிநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகஸ்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள், கிராம சேவையாளர்கள், ஏனைய உத்தியோகஸ்தர்கள் அனைவரும் இணைந்து இந்த பனம் விதைகளை நடுகை செய்தனர்.

பொன்னாலை, மூளாய் ஆகிய பிரதேசங்களில் 7 ஆயிரம் பகம் விதைகள் நடுகை செய்யப்பட்டன. மிகுதி ஆயிரம் பனம் விதைகள் அடுத்து வரும் தினங்களில் நடுகை செய்யப்படவுள்ளன.

ஐம்பதாயிரம் பனம் விதைகள் நடுகை செய்யும் திட்டத்தில், பிரதேச செயலகம் 8 ஆயிரம் விதைகளை நடுகை செய்யவுள்ளது. ஏனைய 42 ஆயிரம் பனம் விதைகளை பனை அபிவிருத்திச் சபை, பிரதேச சபை மற்றும் சனசமூக நிலையங்கள் ஆகிய இணைந்து நடுகை செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .