2025 ஜூலை 21, திங்கட்கிழமை

'குற்றச்செயல்களை கட்டுப்படுத்த அடுத்த ஆண்டு நடவடிக்கை'

Niroshini   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்;பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு  2016ஆம் ஆண்டிலிருந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித சிறிவர்த்தன தெரிவித்தார்.
 
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகுட்பட்ட சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்களுக்கான நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (21) கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது .இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள், சட்ட விரோத கசிப்பு உற்பத்தி, மரக்கடத்தல்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு 2016 ஆம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை, சிவில் பாதுகாப்பு குழுக்களை 2016ஆம் ஆண்டிலிருந்து திறன்பட செயற்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 
2020ஆம் ஆண்டு போதைப்பொருள் அற்ற இலங்கையை உருவாக்கும் ஜனாதிபதியின் செயற்;திட்டத்துக்கு அமைவாக மேற்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .