2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

55 கிலோகிராம் கஞ்சாவுடன் நபர் கைது

Princiya Dixci   / 2016 நவம்பர் 03 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    செல்வநாயகம் கபிலன்

மாதகல் பகுதியில் 55 கிலோகிராம் கஞ்சாவினை வீட்டில் வைத்திருந்த நபரொருவரை, நேற்றுப் புதன்கிழமை (02) இரவு கைதுசெய்துள்ளதாக இளவாலைப் பொலிஸ் நிலைய, கடமை நேர பொலிஸ் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜெயசுந்தர தெரிவித்தார்.

சந்தேகநபர், வீட்டில் வைத்துக் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக இளவாலைப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைக்கப் பெற்றிருந்தது.

இதனையடுத்து உப பொலிஸ் பரிசோதகர் ஜெயசுந்தர தலைமையில் நேற்று மாலை சென்ற பொலிஸ் குழு மாதகல், மேற்குப் பகுதியில் அமைந்திருந்த வீட்டினை முற்றுகையிட்டனர்.

இதன்போது அறை ஒன்றில் கிடங்கு வெட்டி பரல் ஒன்றில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவினைப் பொலிஸார் மீட்டனர்.

அத்துடன், 27 வயதுடைய சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 8.25 மில்லியன் ரூபாய் எனவும் சந்தேகநபரை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இளவாலைப் பொலிஸ்ஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X