2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘தனியார் காணி என்பதால் எம்மால் தீர்வை வழங்க முடியாது’

Niroshini   / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“பன்னங்கண்டி - சரஸ்வதி கமம், தனியார் காணி என்பதால் எம்மால் தீர்வை வழங்க முடியாது. காணி உரிமையாளருடன் பேசி ஒரு சுமூகமான முடிவை பெற வேண்டியுள்ளது” என்று, கரைச்சிப்பிரதேச செயலளார் கோ.நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காணி உரிமையாளரின் உரிய பதில் எதுவுமின்றி கிளிநொச்சி -பன்னங்கண்டி சரஸ்வதி கமம் பகுதியில், மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம், 16ஆவது நாளாகவும் வெள்ளிக்கிழமை (07) தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியில், தனியாருக்கு சொந்தமான சரஸ்வதி கமம்  பகுதியில், 1990ஆம் ஆண்டு முதல் குடியிருந்து வரும் குடும்பங்கள் தமக்கான காணி உரிமங்களை வழங்கி வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட வசதிகளை வழங்குமாறு கோரியே, இப்போராட்டம்  முன்னெடுக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .