2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'தமிழ்த் தலைமைகள் கால அவகாசம் வழங்கி அரசாங்கத்தை காப்பாற்றியுள்ளார்கள்'

Kogilavani   / 2017 ஏப்ரல் 12 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ்த் தலைமைகள் உறுதியாக இருந்திருந்தால், அரசாங்கத்தை பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்வதற்கான அடித்தளம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் இம்முறை இடப்பட்டிருக்கும். ஆனால், தமிழ்த் தலைமைகள் கால அவகாசம் வழங்கி அரசாங்கத்தை காப்பாற்றியுள்ளார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'எதிர்க்கட்சித்  தலைவரின் பணி என்ன? அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவற்றைக் கண்டிப்பதே ஆகும். ஆனால், எதிர்க்;கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் என்ன செய்தார்? தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சி தலைவரானார். தமிழ் மக்களின் அழிவுக்கு காரணமானவர்களையும் அரசாங்கத்தையும் பாதுகாத்துள்ளார்' என்றார்.

'தமிழ்த் தலைமைகள் இருவருக்கு 2 தடவைகள் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது. இரு தடவைகள்  வாய்ப்புகள்  கிடைத்தும் அந்த வாய்ப்புகளை பயன்படுத்தாமல், மக்களிடம் பெற்ற ஆணைக்கு எதிராகவே இரு எதிர்கட்சித் தலைவர்களும் செயற்பட்டிருக்கின்றார்கள்' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .