2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

நாகதாழ்வு தோமையர் ஆலய புனரமைப்புக்கு நிதியுதவி

Niroshini   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நாகதாழ்வு தோமையர் ஆலய புனரமைப்புக்காக  வடமாகாண  சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் நேற்று திங்கட்கிழமை நிதியுதவியை வழங்கி வைத்தார்.

கடந்த வருடம்  மன்னார் நாகதாழ்வு கிராமத்தில் மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், அக் கிராம மக்களை சந்தித்து பேசிய போது, நாகதாழ்வு  தோமையர் ஆலய புனரமைப்புக்கான நிதி உதவியை வழங்கி உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.

குறித்த கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைவாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தனது சொந்த நிதியில் இருந்து  1 இலட்சம் ரூபாய் நிதியினை காசோலையாக தோமையர் ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில்  தோமையர் ஆலய செயலாளர் தயாபரன், பொருளாளர் ஜோசப், அமைச்சர் ரிசாத் பதியுதீனின் இணைப்புச் செயலாளர் முஜாஹிர் மற்றும் நாகதாழ்வு பிரதேச பொறுப்பாளர் தயா ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X