Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜெகநாதன்
வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட 6 மில்லியன் ரூபாய் நிதியை 8 மில்லியன் ரூபாயாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு செவ்வாய்க்கிழமை(22) ஜனாதிபதியுடன் பேசுவதற்குத் தீர்மானித்துள்ளதாக வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நிதி ஆணைக்குழு மாகாண சபை உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடாக 2.5 மில்லியன் ரூபாய் நிதியையே அனுமதித்திருக்கின்றது. இந்நிலையில் எமக்கு 6 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்படுகின்றது. இந்நிலையில் எமக்கு தேவைகளும் மக்களிடமிருந்து கோரிக்கைகளும் அதிகளவில் முன்வைக்கப்படுகின்றன.
வழங்கப்பட்டுவரும் 6 மில்லியன் ரூபாய் நிதியை 8 மில்லியன் ரூபாயாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உறுப்பினர்கள் முதலமைச்சரிடம் கேட்டிருக்கின்றார்கள். இந்த சந்திப்பில் பிரதம செயலாளரும் உடனிருந்தார்.
இந்த விடயம் தொடர்பாக நிதி ஆணைக்குழுவுடன் பேசவேண்டிய தேவையுள்ளது.
எனவே, இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை(22) ஜனாதிபதியுடன் பேசுவதற்குத் தீர்மானித்திருக்கிறோம் என்றார்.
22 minute ago
28 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
52 minute ago