2025 ஜூலை 23, புதன்கிழமை

26 பாடசாலைகளுக்கு கட்டடங்கள்

George   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

இந்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழுள்ள வடமாகாணத்தைச் சேர்ந்த 26 பாடசாலைகளிலும் கட்டடங்கள் அமைப்பதற்கான பணிகள் 2016ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விவாதம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (17) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு கூறினார். 

'வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தவுள்ள இந்தச் செயற்றிட்டத்துக்காக 250 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும், முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி மேம்பாட்டுக்காக யுனிசெப் நிறுவனத்தின் மூலம் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளது' என அமைச்சர் மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .