2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

முரசுமோட்டை பகுதிக்கு மின் இணைப்பு

Niroshini   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் மின்சாரம் வழங்கப்படாத பகுதிகளுக்கான மின் இணைப்பு வேலைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கிராமங்களுக்கான மின் இணைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முரசுமோட்டை பிரதேசத்தின் ஊரியான்,முரசுமோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள போதும் மருதன்குளம், உடுப்பாற்றுக்கண்டல், பொக்கன்குளம், பழைய கோரக்கன்கட்டு ஆகிய கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையிலேயே இக்கிராமங்களுக்கான மின் இணைப்பை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X