2025 ஜூலை 24, வியாழக்கிழமை

'யுத்தம் காரணமாக தமிழர்கள் துன்பத்தை அனுபவித்துள்ளனர்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

இந்த நாட்டில் இடம்பெற்ற கடந்த யுத்தத்தினால் தமிழர்கள் இன்னோரன்ன பல துன்பங்களை அனுபவித்து வந்திருக்கின்றார்கள் என கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
 
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் மாற்றுத்திறனாளிகள் தினம்  நேற்று வியாழக்கிமை அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாண சபையினால் பாடசாலைகளுக்கென்று போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கான எந்த போக்குவரத்து வசதிகளும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. இது தொடர்பாக எமது கிழக்கு மாகாண கல்வி அமைச்சருடன் தொடர்பு கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு என்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் எத்தனையோ திறமையானவர்கள் தங்களது கை, கால்களை இழந்து எதுவும் செய்ய முடியாத நிலையில் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்குரிய உதவிகளை செய்து கொடுக்கும் பட்சத்தில் அவர்களும் இந்த சமூதாயத்தில் இணைந்து செயற்படுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .