2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

1 இலட்சம் கிலோ பார்த்தீனியம் அழிப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமாகாண விவசாய அமைச்சினால் கிலோ 10 ரூபாவுக்கு பார்த்தீனியம் கொள்வனவு என்ற திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பார்த்தீனியம் அழிப்பு நடவடிக்கையில் 1 இலட்சத்து 10 ஆயிரத்து 634 கிலோ பார்த்தீனியச் செடிகள் பொதுமக்களினால் அழிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் வெள்ளிக்கிழமை (01) தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டமானது, மூன்று கட்டங்களாக இடம்பெற்று வந்தது.

முதல் கட்டத்தில் 9 ஆயிரத்து 230 கிலோகிராம் பார்த்தீனியமும், இரண்டாம் கட்டத்தில் 27 ஆயிரத்து 470 கிலோகிராம் பார்த்தீனியமும், மூன்றாம் கட்டத்தில் 73 ஆயிரத்து 934 கிலோகிராம் பார்த்தீனியமும் பொதுமக்களிடம் இருந்து கிலோ 10 என்ற ரீதியில் கொள்முதல் செய்யப்பட்டது.

முதல் இரண்டு கட்டங்களில் பார்த்தீனியம் அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கான கொடுப்பனவு ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், மூன்றாம் கட்டமாக பார்த்தீனியம் அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியில் வியாழக்கிழமை (31) இடம்பெற்றதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .