Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
தடைசெய்யப்பட்ட தொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம், நேற்றுடன்(08) ஒரு வாரத்தை எட்டிய நிலையில், தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவர்களின் போராட்டத்துக்கு, பல மீனவ அமைப்புகள் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், மக்கள் விடுதலை முன்னணயின் அகில இலங்கைப் பொது மீனவர் சம்மேள அமைப்பாளர் ரத்ன கமகே உள்ளிட்டவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேரில் சென்றுச் சந்தித்து, தமது ஆதரவைத் தெரிவித்தது.
வடக்கில், இந்தியாவில் இருந்து வருகைதரும் மீன்பிடிப் படகுகளால், கடல்வளங்கள் சூறையாடப்படுகின்ற அதேவேளை, மீன்பிடிக்காக அங்கிகரிக்கப்பட்ட வலைகள் மற்றும் தொழில் உபகரணங்களை, ஒருசில முதலாளிமார்கள் மாத்திரம் பயன்படுத்துவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகவும், இந்த நிலைமையை, அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பதன் ஊடாக, நல்ல மாற்றத்தைக் காணலாம் என்றும், இதற்காக, வடக்கு மீனவர்களுடன் தெற்கில் உள்ள மக்கள் விடுதலை முண்ணியும் இணைந்துச் செயற்படுமென்றும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
28 minute ago
29 minute ago