2025 ஜூலை 02, புதன்கிழமை

10 வயது சிறுமியை வல்லுறவு புரிய முயற்சித்த 60 வயது முதியவர் கைது

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 24 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். சாவகச்சேரிப் பிரதேசத்தில் 10 வயதான சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 60 வயது முதியவர் ஒருவர் பொலிஸாரால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் கடந்த ஒரு மாதமாக இச்சிறுமியை தனியார் வகுப்புக்குச் அழைத்துச் சென்று வருபவர் என்றும்  சம்பவ தினத்தன்று இச்சிறுமியை தனியார் வகுப்புச் அழைத்துச் செல்லும் வழியில் பற்றைக்குள் கூட்டிச்சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்தார்  என்ற சந்கேத்தின் பேரில்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சிறுமி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .