Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 15 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்சாத் றஹ்மத்துல்லா)
கடந்த 11 வருடகாலமாக மூடப்பட்டிருந்து யாழ். கொடிகாமம் - பருத்தித்துறை வீதி இன்று பிற்பகல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் பொதுமக்கள் போக்குவரத்துக்காக திறந்துவிடப்பட்டது.
கடந்த யுத்த காலத்தின் போது இப்பாதை மூடப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அதேவேளை, இராணுவத்தினரால் அப்பகுதியில் பயன்படுத்தப்பட்டுவந்த 13 வீடுகள் உரியவர்களிடம் இன்று கையளிக்கப்பட்டன.
தற்போது யாழ். குடாநாட்டில் அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து யாழுக்கான தென் பகுதி மற்றும் ஏனைய பகுதி மக்களின் வருகை அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் இப்பாதை மக்கள் பாவணைக்காக திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, றிசாத் பதியுதீன், வட மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து சங்குப்பிட்டி ஊடாக மன்னார் - புத்தளம், கொழும்பு பாதை நாவற்குழியிலிருந்து – காரைதீவு பாதை நவீனமயப்படுத்தும் பணியினையும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்.
17.4 கிலோ மீற்றர் பாதைக்கென 1,387 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 20 மாதங்களுக்குள் இப்பணிகள் நிறைவுறவுள்ளது. அத்தோடு உப்பாறிலிருந்து வரும் கடல் நீரினால் ஏற்படும் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில், நாவற்குளி – கோப்பாய் வெள்ளத்தடுப்பு அணையினையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago