2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

111 வர்த்தகர்களிடம் ரூ.420,500 தண்டப்பணம் வசூல்: பாவணையாளர் அதிகார சபை

A.P.Mathan   / 2013 ஜூன் 18 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
 
காலாவதியான பொருட்கள் மற்றும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத 111 வர்த்தகர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபா தண்ட பணம் நீதிமன்றங்களினால் அறவிடப்பட்டுள்ளதாக பாவணையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி நவரட்ணம் சிவசீலன் இன்று தெரிவித்தார்.
 
யாழில் கடந்த 5 மாதங்களில் 5 நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 111 வர்த்தகர்களுக்கு எதிராக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
நடவடிக்கை எடுக்கப்பட்ட 111 வர்த்தகர்களும் யாழ். மல்லாகம், பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
 
ஆஜர்ப்படுத்தப்பட்டவர்களில் 16 வர்த்தகர்கள் நீதிமன்றிற்கு சமூகமளிக்காததால் அவர்களுக்கு பிடியாணை பிறப்பித்துள்ளதுடன், 95 வர்த்தகர்களுக்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக பாவணையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X