2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

125 இலங்கை, இந்திய மீனவர்கள் பரிமாற்றம்

Super User   / 2014 ஜனவரி 26 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்

இந்திய மீனவர்கள் 66 பேரும் இலங்கை மீனவர்கள் 59 பேரும் சனிக்கிழமை (25)  காங்கேசன்துறை கடலில் வைத்து இந்திய - இலங்கை கடற் படையினருக்கு இடையில் பரிமாற்றப்பட்டுள்ளனர் என யாழ். இந்திய துணை தூதரகம் தெரிவித்தது.

கடந்த டிசம்பர் 29ஆம் திகதி நெடுந்தீவுக் கடற் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட ஜனதாப்பட்டிணம், கோட்டைப் பட்டிணம் ஆகிய பகுதிகளிலிருந்த 6 படகுகளில் வருகை தந்த 22 மீனவர்களும் டிசம்பர் 30ஆம் திகதி நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து கடற் படையினரால் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம், பாம்பன் பகுதிகளிலிருந்து மூன்று நாட்டுப் படகுகளில் வந்த 18 மீனவர்களும் ஜனவரி 21ஆம் திகதி காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட ஜனதாப்பட்டிணம் பகுதியிலிருந்து ஆறு படகுகளில் வருகை தந்த 26 மீனவர்களும் சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமாரினால் விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து இந்திய  கடற் படையினரிடம் கையளிக்கப்பட்டதுடன், இவர்கள் வந்த படகுகளும் ஒப்படைக்கப்பட்டன. இதேவேளை நீர்கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளை சேர்ந்த 59 இலங்கை மீனவர்களும் இந்திய கடற் படையினரால் இலங்கை கடற் படையினரிடம் இதன்போது கைளித்துள்ளனர்.

கடற் படையினரிடமிருந்து மீனவர்களை பொறுப்பேற்றுக் கொண்ட யாழ். நீரியல் வளத் துறையினர் அவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .