2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

13 மில்லியன் ரூபாய் செலவில் பஸ் நிலையங்கள்

Sudharshini   / 2014 நவம்பர் 10 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பொ.சோபிகா

வட மாகாணத்தில் பின்தங்கிய கிராமங்களில் 13 மில்லியன் ரூபாய் செலவில் பஸ் நிலையங்கள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக வட மாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் திங்கட்கிழமை (10) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தில்; கட்டடத்திணைக்களத்தின் ஊடாக மாகாண குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து, தெரிவு செய்யப்பட்ட 5 மாவட்டங்களிலும்; 55 பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

10 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்ட 20 பஸ் நிலையங்களும், 8 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்ட 35 பஸ் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

10 அடி நீளம் கொண்ட பஸ் நிலையம் ஒன்றிற்கு தலா 2 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாயும் 8 அடி நீளம் கொண்ட பஸ் நிலையம் ஒன்றிற்கு தலா 2 இலட்சத்து 21 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்பணத்தில் 16 பஸ் நிலையங்களும் மன்னாரில் 10 பஸ் நிலையங்களும் முல்லைத்தீவில் 10 பஸ் நிலையங்களும் கிளிநொச்சியில் 10 பஸ் நிலையங்களும் வவுனியாவில் 9 பஸ் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

இவ்வாண்டின் நிறைவு பகுதியில் அனைத்து பஸ் நிலையங்களின் வேலைகளும் நிறைவடையும் என்று அவர் தெரிவித்தார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .