2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

14 இந்திய வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் நெல்லிப்பிளவு, செல்வபுரம் ஆகிய கிராமங்களில் இந்திய வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்பட்ட 14 வீடுகள் இன்று செவ்வாய்க்கிழமை (05) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

மேற்படி வீடுகள் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் அமைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், யாழ்.இந்தியத் துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கருத்துத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், மேற்படி கிராமங்களிற்கு மின்சாரம், தண்ணீர் மற்றும் வீதி வசதிகள் ஆகியன விரைவில் ஏற்படுத்தித்தருவதாக உறுதியளித்திருந்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .