2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 15 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ், உரும்பிராய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதற்கு சிறுமியின் வீட்டாரது சம்மதத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனையறிந்த அயவலர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்தனர். இந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்து இன்று செவ்வாய்க்கிழமை (15) யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.
 
வழக்கை விசாரித்த நீதிவான், குறித்த இளைஞரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் அறிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .