2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

1.5 மில்லியன் ரூபாய் செலவில் வீதி புனரமைப்பு

Kogilavani   / 2014 மார்ச் 19 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன், ற.றஜீவன்


பருத்தித்துறை 1 ஆம் ஒழுங்கையில் புனரமைப்பின்றி காணப்பட்ட வீதியானது 1.5 மிவல்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு புதன்கிழமை 19 நடைபெற்றது.

சாவக்சேரி நகர சபையின் கிராம அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் நகர சபை உறுப்பினர் ஞானபிரகாசம் கிஷோருடைய 2013 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து இவ்வீதி புனரமைக்கப்படவுள்ளது.

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் தவிசாளர் இ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் அ.பாலமயூரன், அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .