2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘15,000 கிலோகிராம் மீன்கள் பறிமுதல்; வடமராட்சிக்கு அதிகாரிகள் படையெடுத்துள்ளனர்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

வடமராட்சி கடற்பரப்பில் தொடரும் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் ஆராயவென, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளதாக, வடமராட்சி வடக்கு சமாசத் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

வடமராட்சி கடற்பரப்பில், சட்டவிரோத மீன்படி தொழிலில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்கள் 19 பேர், நேற்று (27) கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 10,000 – 15,000 கிலோகிராம் வரையான மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில், வடமராட்சி வடக்கு சமாசத் தலைவர் நா.வர்ணகுலசிங்கவிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், சிறு படகுகளில் இவ்வாறு மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி இல்லாத நிலையில், வெளிமாவட்ட மீனவர்கள் எவ்வாறு மீன்பிடியில் ஈடுபட்டனரென சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தான் கேட்டதாகவும் இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக, அவர் மேலும் கூறினார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .