2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

16 கிராமங்களில் வாசிகசாலைகள்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 01 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.தபேந்திரன்

சமூக சேவைகள் அமைச்சின் 'சிசு புபுது' திட்டத்தின் கீழ், இலங்கையிலுள்ள 16 கிராமங்களில் இவ்வருடம் வாசிகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் திங்கட்கிழமை (01) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

வறிய நிலையிலுள்ள கிராம மக்களின் வாசிப்புத்திறனையும் கல்வித்தரத்தையும் மேம்படுத்தும் நோக்குடன் இலங்கையிலுள்ள 16 கிராமங்களை தெரிவு செய்தோம்.

தெரிவுசெய்யப்பட்ட கிராமத்திலுள்ள பொதுக்கட்டடம் ஒன்றில் வாசிகசாலை அமைப்பதற்காக புத்தகங்களையும் அவற்றை வைப்பதற்கான புத்தகங்களையும் வழங்கினோம். ஒவ்வொரு கிராமத்துக்கும் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் வாசகசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சமூக சேவைகள் அமைச்சால்;, இத்திட்டம் வருடா வருடம் நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.  சமூக சேவைகள் அமைச்சின் கீழுள்ள சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் சமூகப் பணி டிப்ளோமா கற்கை நெறிகளை கற்கும் மாணவர்கள், களப்பணியின்போது இனங்கண்ட கிராமங்களும் இத்திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டு வாசிகசாலை அமைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில், கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இருபாலை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் இந்த வாசகசாலை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .